இலங்கை இனவாதிகளின் அடுத்த காய் நகர்வு: யூனிசெப் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளரை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு

james_elderவவுனியாவில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களின் அவலநிலைக் குறித்த தகவல்களை வெளியிட்ட யூனிசெப் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளரை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற இலங்கை அரசாங்கம் நேற்று (02) உத்தரவிட்டுள்ளது.

இவர் இடம்பெயர்ந்த முகாம் தொடர்பாக பொய்யான தகவல்களை உலகிற்கு வெளியிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம்நுமத்தியுள்ளது. யூனிசெப் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளராக ஜேம்ஸ் எல்டர், இடம்பெயர்ந்த மக்கள் பட்டினியால் இறப்பதாகவும் குழந்தை போஷாகின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
 
 இவர் தெரிவித்த விடயங்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் பொய்யான செய்தியை ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வெளியிட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இவரின் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளதாகவும் அவை பற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அதிக கவனம் செலுத்தியிருந்தாகவும் இதனையடுத்தே யூனிடிசெப் பணிப்பாளரை நாட்;டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், ஜேம்ஸ் எல்டர், உத்தரவை விலகிக் கொள்ள மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை என கூறப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.