மூன்று லட்சம் அகதிகளையும் புலிகளாக நினைக்கக் கூடாது அரசிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

ranil2அகதி முகாம்களில் புலி உறுப்பினர்கள் உள்ளனர் என்பது உண்மையென்றால் அவர்களுக்கு எதுவித தண்டனையும் வழங் காது அவர்களை சமூக வாழ்வுக்குள் இணைத் துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.

அதேபோல் மூன்று லட்சம் அகதிகளையும் புலிகளாக நினைத்துத் தண்டனை வழங்கவோ கொடுமைப்படுத்தவோ வேண்டாம் என்றும் அக்கட்சி கேட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத் தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் எம்.பி. விஜிர அபயவர்தனவே இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:

ஒருவர் குற்றம் புரிந்தால் அவரைக் கொலை செய்யக்கூடாது. அது பௌத்த தர்மம் அல்ல. மனிதர்கள் தவறு செய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அவர் களை சமூகத்தோடு இணைக்கவேண்டும்.சிறைச்சாலைகளில் இருந்த ஜே.வி.பியினருக்கு எமது கட்சிமன்னிப்பு வழங்கியது ஜே.வி.பி. கலவரத்தின்போது ஜே.வி. பியினர் பலர் பூஸா உட்பட பல சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அன்று ஆட்சியில் இருந்த எமது கட்சி அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அவர் களை விடுதலை செய்தது.

இப்போது ஜே.வி.பியின் எம்.பியாகவிருக்கும் நிஹால் கலபதிகூட அப்போது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது. இதேபோன்று வவுனியா அகதி முகாம்களில் உள்ளவர்களுக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும். கருணா, பிள்ளையான் போன்றவர்களைக்கூட ஐக்கிய தேசியக் கட்சிதான் சமூக வாழ்வுக்கு அழைத்து வந்தது.

அதேபோல் வவுனியா அகதி முகாம்களில் உள்ளவர்களில் புலிகள் இருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களை சமூக வாழ்வில் இணைக்க வேண்டும். ஆனால் மூன்று லட்சம் அகதிகளையும் புலிகளாக நினைத்து அவர்களைக் கொடுமைப்படுத்தக்கூடாது. அவர்களை உடனடியாக மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த மக்கள் அகதி முகாம்களில் அதிக துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களை மீளக்குடியமர்த்துவதன்மூலம்தான் அந்தமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.