மூன்றாவது தலைமுறையையும் களமிறக்கும் ராஜபக்ஷ குடும்பம்

namal-rajapakshe0000228தெற்காசியா பரம்பரை அரசியலுக்குப் பெயர் பெற்றது. இலங்கை, இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பரம்பரை கொடிகட்டிப் பறக்கிறது. இலங்கை அரசியலில் பரம்பரை குடும்ப ஆதிக்கம் என்பது நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளது.           சேனநாயக்க குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம், விஜேரத்ன குடும்பம், ராஜபக்ஷ குடும்பம், ஹேவாவிதாரண குடும்பம், குணவர்த்தன குடும்பம், திசாநாயக்க குடும்பம் என்று குடும்ப அரசியல் பிரதான கட்சிகளில் முக்கிய இடம் வகித்து வந்துள்ளது.

காலத்துக்குக் காலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் ஆதிக்கம் அரசியலில் இருந்து வந்திருக்கிறது.   இந்தவகையில் இப்போது ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் வலுவடைந்திருக்கிறது.

மூன்றாவது தலைறையையும் அரசியலுக்குள் களமிறக்கும் அளவுக்கு ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் விரிவடைந்துள்ளது.  ராஜபக்ஷ குடும்பத்தின் முதலாவது தலைறை அரசியல்வாதி டி.ஏ.ராஜபக்ஷ ஆவார்.   1947இல் நடந்த பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பெலியத்த தொகுதியில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் டொன் அல்வின் ராஜபக்ஷ.

இவர்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தந்தை. ஐ.தே.க.வில் முரண்பாடுகள் ஏற்பட்டு, பண்டாரநாயக்க பிரிந்து சென்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். அப்போது டி.ஏ.ராஜபக்ஷவும் அவருடன் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கத்தில் பங்களித்தார்.         சுந்திரக் கட்சியின் சார்பில் பெலியத்தை தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அவர் தஹநாயக்கவின் அமைச்சரவையில் விவசாய, காணி அமைச்சராக 1959 இல் நியமிக்கப்பட்டார்.     1960இல் நடந்த இரண்டாவது தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், பிரதி சபாநாயகராகப் பொறுப் பேற்றார்.

1965இல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த அவர் 1967இல் மரணமானார்.

ஆனால் அவர் தனக்குப் பின்னால் அரசியலில் ஈடுபடுத்துவதற்கு வாரிசுகளை உருவாக்கத் தவறவில்லை. இப்போது டி.ஏ.ராஜபக்ஷவின் பிள்ளைகள் நால்வர் அரசாங்க நிர்வாகத்துக்குள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

ஜனாதிபதியாக இருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. துறைகங்கள் மற்றும் விமான நிலையங்கள் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார் சமல் ராஜபக்ஷ. பாதுகாப்பு செயலாளராக இருக்கிறார் கோத்தாபய ராஜபக்ஷ. ஜனாதிபதியின் சிரேஷட ஆலோசகராக அவருக்கு எல்லாமாக விளங்குகிறார் பசில் ராஜபக்ஷ.

இப்போது ராஜபக்ஷ குடும்பம் தனது முன்றாவது தலைறையையும் அரசியலில் களமிறக்கத் தொடங்கி விட்டது. அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகன் சசீந்திர ராஜபக்ஷ ஊவா மாகாணசபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று அந்த மாகாண முதலமைச்சராகப் பதவி வகிக்கிறார்.  அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் அரசாங்கத்தில் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் மேலும் அதிகக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

முன்னர் தென் மாகாணத்துக்குள் இருந்த ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் ஆதிக்கத்தை அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில், அடுத்த பொதுத்தேர்தலில் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் பரவலாகக் களமிறக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து தெரிவானவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ. அவர் அடுத்த தேர்தலில் அந்த மாவட்டத்தில் போட்டியிடுவாரா என்பது சந்தேகமே.   காரணம் அடுத்த பொதுத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்தமகன் நாமல் ராஜபக்ஷ போட்டியிடப் போவது தான்.

தென் மாகாணசபைத் தேர்தலில் நாமல் களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் அதில் போட்டியிடவில்லை. ஆனால் அடுத்த பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதி என்கின்றனர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் த்த தலைவர்கள்.

அம்பாந்தோட்டை மாவட்டம் பெலியத்தை தொகுதியில் இருந்தே டி.ஏ.ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ போன்றோர் அரசியலுக்குள் வந்தனர்.   எனவே நாமல் ராஜபக்ஷவும் அங்கிருந்தே அரசியல் பயணத்தை ஆரம்பிக்கலாம் என்று கருதப்படுகிறது.  நாமல் ராஜபக்ஷ அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவாரேயானால்  அம்பாந்தோட்டையில் இருந்து சமல் ராஜபக்ஷ இரத்தினபுரிக்கு மாறுவார் என்கிறது ஒரு தகவல்.

இரத்தினபுரியில் தமது குடும்பத்தின் அரசியல் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் உள்நோக்கம் இதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே ஊவா மாகாணசபைக்கு சசீந்திர ராஜபக்ஷவை நிறுத்தியது கூட இத்தகைய நோக்கத்தின் அடிப்படையில் தான்.

குடும்ப அரசியல் என்று வரும்போது ஒரே மாவட்டத்துக்குள அல்லது மாகாணத்துக்குள் முடங்கியிருப்பது காலப்போக்கில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். அடுத்தது மாவட்ட, மாகாண எல்லைகளுக்கு அப்பாலும் குடும்ப அரசியல் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவது.

இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையிலேயே மொனராகல மாவட்டத்தில் சசீந்திர ராஜபக்ஷவைக் களமிறக்கியிருந்தார் ஜனாதிபதி மஹிந்த. நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறக்கப்பட்டால் அவர் தென் மாகாணத்துக்குத் தலைமையேற்பார். அதேவேளை, ஊவா மாகாணத்துக்கு சசீந்திர ராஜபக்ஷ தலைமையேற்பார்.

இரத்தினபுயில் களமிறங்கினால் சமல் ராஜபக்ஷ சப்ரகவ மாகாணத்துக்குத் தலைமை வகிப்பார்.  இந்தநிலையில், அடுத்த பொதுத்தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போரில் வெற்றிபெற்றவுடனேயே அவரை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் அதற்கு எந்தப் பதிலையும் கொடுக்கவில்லை. இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் வரப் போகின்ற நிலையில் யாரும் விட்டுக் கொடுத்து நாடாளுமன்றத்துக்குச் செல்வதை அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது.

குருநாகல் மாவட்டத்தில் அவர் போட்டியில் இறங்கினால் வடமத்திய மாகாணத்துக்கான தலைமை அவரிடம் வந்து சேரும். இதற்கிடையே ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக இருக்கும் பசில் ராஜபக்ஷ வெறும் எம்.பியாக இருந்தாலும் அமைச்சர்களை விட அதிகாரம்,செல்வாக்கு அவருக்கே உள்ளது.

பசில் ராஜபக்ஷ அடுத்த தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடப் போகிறார். அவ்வாறாயின் இவர் மேல் மாகாணத்துக்கான தலைமைத்துவத்தை ஏற்பார். இந்தவகையில் ஐந்து மாகாணங்களின் ஆதிக்கம் ராஜபக்ஷ குடும்பத்தின் கைகளில் வந்து விடும். வடக்கு, கிழக்கு தவிர எஞ்சியிருப்பது வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்கள் தான்.

விரைவிலேயே அங்கேயும் ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் வாசுகள் ளைத் தாலும் ஆச்சயம் ஏது மில்லை.  சந்திரிகா அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள பண்டா குடும் பத்தின் ஆதிக்கம் தளர்ந்து போய் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் வலுப் பெறத் தொடங்தகியது.

ஆனால் குறுகிய காலத்துக்குள் இவர்களின்  ஆதிக்கம் அரசியலில் ஆழ வேரோடி நிற்கிறது.  இது ஆளும்கட்சிக்குள் பெரிதாக வரவேற்கப்படுமா என்று தெரியவில்லை. காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் தாம் ஓரம்கட்டப்படுவதாக உணரும் போது சிக்கல்கள் தோன்றும்.

ஏற்கெனவே பசில், கோதாபய, சமல் ஆகியோர் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதால் கட்சியின் மூத்த தலைவர்கள் புகைந்து கொண்டிருக்கின்றனர். போர் வெற்றி என்ற மாயத்திரை இருக்கும் வரை தான் இவர்களின் புகைச்சல் மறைந்திருக்கும்.

அது விலகும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் வாரிசு அரசியலுக்கு எதிராக புகைச்சல்கள் கிளம்பலாம்.  அதற்குள் தமது குடும்பத்தின் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொள்ள முனைகிறார் ஜனாதி பதி மஹிந்த.

அதற்காகவே சசீந்திர, நாமல் போன்றோன்  அரசியல் பிரவேசங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.