விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த அரசு விதித்த தடையை எதிர்த்து கொளத்தூர் மணி வழக்கு

kulathoormaniதடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசவோ, கூட்டம் நடத்தவோ, அவர்களது படம், கொடி, பேட்ஜ்கள் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும், பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது என்றும், விளம்பரப்படுத்தக்கூடாது என்றும் தமிழக தலைமை செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை மீறினால் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றமாகும் என்றும், இந்த சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

எங்கள் இயக்கம் 1983 முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து வருகிறது என்றும், விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்த அறிவிப்பை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.