இலங்கைக்குள் CIA அதிகாரிகள் பிரவேசித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு சந்தேகம்

அமெரிக்க புலனாய்வுத் துறையின் (CIA) அதிகாரிகள் சிலர் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவர்  எதெரிவித்தார்.

இந்தியப் புலனாய்வுப் பிரிவான ஷறோவினால், இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ள தகவலுக்கமையவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறித்து இதுவரை அறியமுடியாதுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் காணப்படும் எண்ணெய்க் கனிமம் குறித்து ஆராய்வதற்கு அமெரிக்காவினால் அனுப்பப்பட்டுள்ள குழுவின் நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் தகவலளித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.