தனுஷ்கோடி: நடுக்கடலில் தவித்த இலங்கை அகதி மீட்பு

நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த அகதி ஒருவர் தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்டார். இலங்கையில் அந்நாட்டு ராணுவம் தமிழர்களை சித்ரவதை செய்து வருகிறது. இதனால் அங்குள்ள தமிழர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக தமிழகத்துக்கு வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பகுதி அரளிபட்டி என்னும் கிராமத்தில் வசித்து வந்த சிவகுமார் என்ற 33 வயது வாலிபர் ஒருவர் அப்பகுதியில் இருந்த மீனவர்களுக்கு ரூ. 40 ஆயிரம் கொடுத்து தமிழகத்துக்கு வர முயன்றுள்ளார்.

அவரை அழைத்து வந்த அந்த மீனவர்கள் தமிழக எல்லைப்பகுதியில் கடலில் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். தனுஷ்கோடி கடல் பகுதியில் தத்தளித்து கொண்டிருந்த அவரை பார்த்த தமிழக மீனவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அந்தத் தமிழர் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.