முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வளிக்க பிரித்தானிய ஆதரவு

முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கத் தேவையான உதவிகளை வழங்கத் தயார் என பிரித்தானியா அறிவித்தள்ளது. முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான உதவு தொகையாக 17 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.

இதற்கான உடன்படிக்கையொன்றில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ஸ் மற்றும் குடியேற்றத்திற்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவர் முஹமட் அப்டிகரும் கைச்சாத்திட்டுள்ளனர்.
 
யுத்தத்தில் ஈடுபட்ட முன்னாள் போராளிகளுக்கு காத்திரமான முறையில் மாறுவாழ்வு வழங்கும் நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா முழு ஆதரவினை வழங்கும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ஸ் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதன் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.