இலங்கையின் நீதிமன்ற சட்டங்களை மாற்ற எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது

இலங்கையின் நீதிமன்ற சட்டங்களை மாற்ற எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என அரசாங்கம், நேற்று கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அறிவித்துள்ளது. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை தொடர்பான தீர்ப்பை குறித்த நாடுகள் விமர்ச்சித்திருந்தன. இதனையடுத்தே அரசாங்கம் மேற்கண்டாறு கூறியுள்ளது.

மேற்குல நாடுகளும், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஊடகவியலாளர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளன. இந்த நிலைமையில் இலங்கையின் நீதிமன்ற செயற்பாடுகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.