துரோகிகளுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் – தமிழகத்திலிருந்து அதிபதி

தமிழ்வின் இணையதளத்தில் விஜயை கண்டித்தது தவறு என்று வெளியிட்ட செய்தியை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். சேனல் 4ல் வெளியிடப்பட்ட காணொளியால் அனைவரும் துடி துடித்துப் போய் உள்ள இந்த நேரத்தில் இந்த விஜய் காங்கிரஸூடன் போய் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். ஈழத்தமிழர்களை காப்பாற்ற பேச்சு நடத்த வேண்டியதுதானே? தமிழக இளைஞர் காங்கிரஸ் பதவி பற்றி என்ன
பேச்சு வேண்டியிருக்கிறது?

இப்போது விட்டு விட வேண்டியது. பிறகு அவர் காங்கிரஸில் பெரிய ஆளாக வளர்ந்து ப.சிதம்பரத்தை போல உள்துறை அமைச்சராகவோ அல்லது வெளியுறவு அமைச்சராகவோ ஆகி விடுவார். அப்போது போய் கொல்லாதே, கொல்லாதே என்று கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா?

தமிழர்கள் தொடர்ந்து துரோகிகளை தட்டிக் கேட்காததால்தான் இப்படி அனைவரும் எளிதாக துரோகம் செய்து விட்டு போய் விடுகிறார்கள். சோனியாவின் கொலைகார குடும்பத்துடன் எவ்வகையிலாவது தொடர்பை வைத்திருந்தால் அவர்களை செத்துப் போன ஈழ மக்களின் ஆன்மா மன்னிக்காது.

காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கும் திருமாவை குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள். வாரா வாரம் நக்கீரனில் கதை எழுதி விட்டு கருணாவுக்கும், கனிமொழிக்கும் சாமரம் வீசும் ஜெகத் கஸ்பரை பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்கள். எல்லோரும் தங்களுடைய அரசியல் நலன்களைதான் முக்கியமாக கருதுகிறார்கள்.

துரோகிகளை ஆரம்பத்திலேயே கண்டித்தால்தான் மற்றவர்கள் திருந்துவார்கள், பயப்படுவார்கள். அவர்களை ஒன்றும் கேட்காமலிருந்தால் பிறகு மற்றவர்களும் அதே போல் செய்வார்கள்.

உல்கமே சொல்லி கேட்காத ராகுலின் கொலைகார குடும்பம் விஜய் சொன்னால் மட்டுக் கேட்டு விடப் போகிறதா? கொலைகாரர்களை தட்டிக் கேட்பதற்கு பதிலாக அவர்களுடன் இணைவதுதான் சரி என்றால் விடுதலைப்புலிகள் எல்லோரும் காங்கிரஸ் உறுப்பினர் அட்டைகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

நடுநிலையோடு எதையும் எண்ணிப் பாருங்கள். கொலைகாரக் கரங்களையுடைய காங்கிரஸூடன் கூட்டணி வைக்கும் எல்லோரும் துரோகிதான். அதில் நல்ல துரோகி, கெட்ட துரோகி என்று எதுவும் கிடையாது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.