இளையோர் ஒன்றியத்தின் தமிழீழ வெற்றி கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டப்போட்டி

Canada (2)கனடிய தமிழ் இளையோர் ஒன்றியத்தின் தமிழீழ வெற்றி கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பேர்ச்மௌன்ட் மற்றும் பின்ச் சந்திப்புக்கருகாமையில் அமைந்திருக்கும் லமறு மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு இன்று காலை எட்டு மணியளவில் தமிழீழ மற்றும் கனடியத்தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதுடன் அணிவகுப்பு மரியாதையும் செய்து தொடங்கப்பட்டது.

தமிழீழ வெற்றிக்கின்னமானது தமிழீழ அடையாளங்களை கனடியத்தமிழ் இளையோர் மனதில் நிறுத்தி அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் கனடிய மட்டத்தில் தமிழ் இளையோரின் உதைப்பந்தாட்ட திறமையை கொண்டு வர வேண்டும் என்பதையும் நிலை நிறுத்தி இந்நிகழ்வு இடம்பெற்றது.

இப்போட்டியில் எட்டு, பத்து, பன்னிரண்டு, பதின்னான்கு, பதினாறு வயதுக்குட்பட்ட மற்றும் பதினாறு வயதுக்கு மேற்பட்டோர் அணிகளாக போட்டிகள் இடம்பெற்றது.

எட்டு மற்றும் பத்து வயதுக்குட்பட்ட போட்டிகளில் சிவேவ் அணியினரும் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட போட்டியில் டிடன்ஸ் வெஸ்ட் அணியினரும்
பதின்னான்கு மற்றும் பதினாறு வயதுக்குட்பட்ட போட்டிகளில் யார்விஸ் அணியினரும் வெற்றி பெற்றனர்.

தமிழீழ உதைப்பந்தாட்ட சுற்றுக்கின்னத்தின் இறுதிச்சுற்றில் சிவேவ் மற்றும் ஈழம் சலேன்சர் அணியினர் மோதிக்கொண்டனர். அதில் ஈழம் சலேன்சர் அணியினர் வெற்றி வாகை சூடி தமிழீழ வெற்றிகின்னத்தை பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியில் சிறப்பாக ஆடியவருக்கு சிறுத்தை கிண்ணமும் கோல் கீப்பருக்கு வாகை கிண்ணமும் டிபின்டெருக்கு செண்பக கிண்ணமும் வழங்கப்பட்டது.

தமிழீழ உதைப்பந்தாட்ட கிண்ண சுற்றுப்போட்டியில் அதி சிறந்த ஆளுமையை வெளிப்படுத்திய போட்டியாளருக்கு தங்க பதக்கமும் வழங்கப்பட்டது.

தமிழீழதின் அடையாளங்களை என்றும் பேணி தமிழீழம் நோக்கிய பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதி மொழியுடன் இளையோர் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

கனடிய தமிழ் இளையோர் ஒன்றியத்தின் தமிழீழ வெற்றி கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பேர்ச்மௌன்ட் மற்றும் பின்ச் சந்திப்புக்கருகாமையில் அமைந்திருக்கும் லமறு மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு  இன்று காலை எட்டு மணியளவில் தமிழீழ மற்றும் கனடியத்தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதுடன் அணிவகுப்பு மரியாதையும் செய்து தொடங்கப்பட்டது.

தமிழீழ வெற்றிக்கின்னமானது தமிழீழ அடையாளங்களை கனடியத்தமிழ் இளையோர் மனதில் நிறுத்தி அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் கனடிய மட்டத்தில் தமிழ் இளையோரின் உதைப்பந்தாட்ட திறமையை கொண்டு வர வேண்டும் என்பதையும் நிலை நிறுத்தி இந்நிகழ்வு இடம்பெற்றது.

இப்போட்டியில் எட்டு, பத்து, பன்னிரண்டு, பதின்னான்கு, பதினாறு வயதுக்குட்பட்ட மற்றும் பதினாறு வயதுக்கு மேற்பட்டோர்  அணிகளாக போட்டிகள் இடம்பெற்றது.

எட்டு மற்றும் பத்து வயதுக்குட்பட்ட போட்டிகளில்   சிவேவ் அணியினரும் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட போட்டியில் டிடன்ஸ் வெஸ்ட் அணியினரும்
பதின்னான்கு மற்றும் பதினாறு வயதுக்குட்பட்ட போட்டிகளில்  யார்விஸ் அணியினரும் வெற்றி பெற்றனர்.

தமிழீழ உதைப்பந்தாட்ட சுற்றுக்கின்னத்தின் இறுதிச்சுற்றில் சிவேவ் மற்றும் ஈழம் சலேன்சர் அணியினர்  மோதிக்கொண்டனர். அதில் ஈழம் சலேன்சர்  அணியினர் வெற்றி வாகை சூடி தமிழீழ வெற்றிகின்னத்தை பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியில் சிறப்பாக ஆடியவருக்கு சிறுத்தை கிண்ணமும் கோல் கீப்பருக்கு வாகை கிண்ணமும் டிபின்டெருக்கு செண்பக கிண்ணமும் வழங்கப்பட்டது.

தமிழீழ உதைப்பந்தாட்ட கிண்ண சுற்றுப்போட்டியில் அதி சிறந்த ஆளுமையை வெளிப்படுத்திய போட்டியாளருக்கு  தங்க பதக்கமும் வழங்கப்பட்டது.

தமிழீழதின் அடையாளங்களை என்றும் பேணி தமிழீழம் நோக்கிய பயணத்தில் தொடர்ந்து  பயணிப்போம் என்ற உறுதி மொழியுடன் இளையோர் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.