அம்பாறை கொலைகளுக்கு விடுதலைப் புலிகள் மறுப்பு

untitled1ரத்மல்கக எல சிங்கள குடியேற்றக் கிராமத்தில் 15 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என சிறிலங்கா இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்தப் படுகொலைக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தாக்குதல் தளபதிகளில் ஒருவரான நகுலன் மறுத்துள்ளார்.
கிழக்கில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே இந்தப் படுகொலைக்கு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிங்களப் பொது மக்களை விடுதலைப் புலிகள் கொல்கின்றார்கள் என்று சர்வதேச ரீதியாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சிறிலங்கா தமது மக்களையே படுகொலை செய்தது கடந்த காலங்களில் நடைபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.