கனடிய தமிழ் இளையோர் ஒன்றியம் நடத்திய தமிழீழ வெற்றிக்கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்ட போட்டி – 2009

Canada (7)கனடிய தமிழ் இளையோர் ஒன்றியத்தின் தமிழீழ வெற்றிக்கிண்ணத்துக்கான போட்டி ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் 6ம் திகதி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் 35 விளையாட்டு அணிகளின் பங்கேற்புடன் ஸ்காபுரோ – L’Amorouex Sports Complex மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு காலை 10.00 மணிக்கு தமிழீழ மற்றும் கனடிய தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழீழ வெற்றிக்கிண்ணமானது தமிழீழ அடையாளங்களை கனடிய தமிழ் இளையோர் மனதில் நிறுத்தி அதை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பதையும் கனடிய மட்டத்தில் தமிழ் இளையோரின் உதைபந்தாட்ட திறமையை மென்மேலும் மேம்படுத்தவேண்டும் என்பதையும் நிலைநிறுத்தி இந் நிகழ்வு இடம்பெற்றது. இப் போட்டியில் 8, 10, 12, 14, 16 வயதுகளுக்குற்பட்ட மற்றும் 16 வயதுக்கு மேற்பட்ட அணிகளுக்கான போட்டி இடம்பெற்றது.

8, மற்றும் 10 வயதுக்குட்பட்ட போட்டிகளில் சீவேவ்ஸ் அணியினரும், 12 வயதுக்குட்ட போட்டியில்டைட்டன் வெஸ்ட் அணியினரும் 14, 16 வயதுப்பிரிவினருக்கான போட்டிகளில் ஜாவீஸ் அணியினரும் வெற்றிவாகை சூடிக்கொண்டனர். 16 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கானதும் அதி உயர் விருதாக கருதப்படுவதுமான தமிழீழ சுற்றுக்
கிண்ணத்திற்காக நடைபெற்ற இறுதிப்போட்டியில் மொன்றியலில் இருந்து வந்து பங்கேற்ற ஈழம் செலஞ்சர்ஸ் அணியினரும், சீ வேவ்ஸ் அணியினரும் மோதிக்கொண்டனர். இந்த உக்கிரமான போட்டியில் சீ வேவ்ஸ் ஒருகோல் முன்னணியில் நிற்க இறுதி நிமிடங்களில் ஈழம் செலஞ்சர்ஸ் ஒரு கோலைப் பெற்று போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தது. போட்டி விதிமுறைக்குற்பட்ட நேரம் முடிவுக்கு வரவும் பெனல்டி முறையில் வெற்றிதீர்மானிக்க நடுவர்களால் முடிவு செய்யப்பட்டது. இந்த பெனால்டி முறையின் போது நான்குக்கு மூன்று என்ற கோல் அடிப்படையில் ஈழம் செலஞ்சர்ஸ் தமிழீழ வெற்றிக்கிண்ணம் – 2009ஐ தமதாக்கிக் கொண்டனர். இப்போட்டியில் வயதுப்பிரிவின் அடிப்படையில் சிறந்த மூன்று விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

Best Goal Keeper, Best Defender, Best Player
என தெரிவு செய்யப்பட்டு எமது தேசியத்தின் அடையாளச் சின்னங்களான வாகை, செண்பகம், சிறுத்தை ஆகியவற்றை மனதிருத்தும் வண்ணம் குறிப்பிட்ட விளையாட்டுவீரர்களுக்கு முறையே வாகை கிண்ணம், செண்பகக்கிண்ணம், சிறுத்தைக் கிண்ணம் என வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.

தமிழீழச் சுற்றுப்போட்டிகளில் அதி சிறந்த ஆளுமையை வெளிப்படுத்திய விளையாட்டு வீரருக்கு தமிழீழம் பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்வு தமிழீழத்தின் அடையாளங்களை என்றும் பேணி தமிழீழம் நோக்கிய பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதி மொழியுடன் இந்நிகழ்வு இரவு 10.00 மணிக்கு இனிது நிறைவுபெற்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.