விடுதலை புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பு அரசாங்கத்தால் நிராகரிப்பு

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் யுத்த நிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் தயாரென அறிக்கையொன்றின் மூலம் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நாடேசன் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி தெரிவித்துள்ளது.

“தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும், உத்தரவாதத்துடனும் கிடைக்குமாயின் விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தத் தேவையில்லை”என அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச சமூகம் யுத்தநிறுத்தமொன்றினை மேற்கொள்ள சர்வதேச சமூகம் சகல விதமன நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.அத்துடன் இராணுவ நடவடிக்கைகளாலன்றி அரசியல் தீர்வு மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனவும் இணைத்தலைமை நாடுகளுக்கு பா.நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை தமிழ் மக்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கை குறித்தும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. “சர்வதேச சமூகம் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கை குறித்துத் தயக்கம் காண்பிக்கும் சமயம் நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக தனிநாடு ஒன்றே அரசியல் தீர்வாக அமையும்” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் விடுதலை புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார, விடுதலைப் புலிகள் நிபந்தனைகள் இன்றி முதலாவதாக ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், “எங்களது நிலைப்பாடு அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்பதுதான். எங்களது இந்நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை” எனத் தெரிவித்தா

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.