பிரான்சில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

பிரான்சு தலைநகர் பாரிசில் அமைந்துள்ள பிரான்சின் நாடாளுமன்றம் முன்பாக சிறிலங்கா அரசின் தமிழின வதையையும் மனிதவுரிமை மீறலையும் கண்டித்து 09.09.2009 புதன்கிழமை மாலை 15.00மணிக்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது.

இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்களை வதைமுகாம்களுக்குள் இரக்கமற்றமுறையில் அடைத்து வைத்து சொல்லொணா துன்பத்துக்கு உள்ளாக்கி; படுகொலை செய்தும் பெரும் நெருக்குதல்களைக்கொடுத்து வருகிறது. முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக விடுவிக்கக்கோரியும் தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் கிடைக்கச்செய்யவும் வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுகக்கப்பட்ட அதேவேளை சிறிலங்கா அரசிற்கெதிரான பதாகைகள் தாங்கி துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

இன்று முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்கள் காயங்கள்பட்டு வலிகளோடு வாழ்ந்து வருகிறார்கள் அடிப்படை வசதிகளற்று வாழும் அவர்கள் சொந்தமண்ணில் நிரந்தரமாக வாழவேண்டுமாயின் புலம்பெயர் தேசங்களிலுள்ள நாம் தொடர்ச்சியாக போராடவேண்டியது கட்டாயமாகும் எனவே அனைத்து பிரான்சு வாழ் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து மக்களின் வாழ்விற்காக பாடுபடவேண்டும்.

பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஒன்றுகூடலானது இனிவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 15.00மணிக்கு நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மக்களும் இனிவரும் போராட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.