> பயங்கரவாதம் முடிந்து விட்டதால் அவசரகால சட்டம் தேவையில்லை, வாக்கெடுப்பில் ஜே.வி.பி வெளிநடப்பு

அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தினை வாக்கெடுப்பிற்கு விடும் வேளை நாம் அதனை ஆதரித்தமைக்கு காரணம் அப்போது பயங்கரவாதம் நாட்டில் இருந்தது. தற்போது அவை ஒழிக்கப்பட்டபின்பும் பயங்கரவாத தடை சட்டம் தேவையற்ற தொன்று. தற்போது அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி சனனாயக போராட்டங்களையும் நசுக்குகின்றது. என கூறிய ஜே.வி.பி நேற்று நடந்த பயங்கரவாத சட்ட நீடிப்பு தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளினடப்பு செய்தது.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 100 உறுப்பினர்களும் எதிராக 13 உறுப்பினர்களும் வாக்களித்தமையால் 87 அதிகப்படியான வாக்குகளால் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மாலை நிறைவேற்றப்பட்டது.

ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.