ஐரோப்பிய ஒன்றிய விசாரணைக்குழு GSP Plus சலுகையினை நிறுத்துமாறு சிபார்சு -எதிர்கொள்ள முடியும் என பாலித கேகென்ன ஆக்ரோசம்

சிறிலங்கா அரசானது மனித உரிமைகளை மதிப்பதில் இருந்து தவறியுள்ளது என்றும் எனவே அதனை தண்டிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி வரி சலுகையினை சிபார்சு செய்வதற்கான விசாரணைக்குழு கூறியுள்ளது. இதனால் ஒரு பில்லியன் (1000 கோடி ரூபா )வருமானம் தரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி வியாபாரத்தினை சிறிலங்கா அரசு இழக்கின்றது !இது தொடர்பாக சிறிலங்காவின் வெளி நாட்டு அமைச்சின் செயலர் பாலித கேகன்ன கருத்து கூறுகையில் : வரிசலுகையினை நிறுத்துவதன் மூலம் வரும் நட்டத்தினை தமது அரசு சமாளிக்க முடியும் எனவும் அத்துடன் மேற்கத்தகைய நாடுகளின் சந்தை ஆதிக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும், தமக்கு ஆசியாவில் புதிய சந்தைகள் இருப்பதனால் தாம் கவலைப்படவில்லை என்றும் கூறியுள்ளார். எனினும் மனித உரிமைகளை காரணங்காட்டி சிறிலங்காவில் உள்ள பெண் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பது நல்லது அல்ல என புலம்பியும் உள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி வரி சலுகையானது நாட்டின் மனித உரிமை விழுமியங்களை அன்நாடு மதித்து நடக்கின்றதா என்ற அளவு சுட்டியினை மையமாக வைத்தே நீடிப்பது வழக்கம். இந்த ஆண்டு அது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமை தொடர்பில் ஆய்வு செய்ய ஒரு குழுவினை அமைத்தது. அமைத்தது மட்டுமன்றி அந்த குழு சிறிலங்கா சென்று ஆய்வினை செய்யவும் தீர்மானித்தது. ஆனால் அந்த குழுவினை நாட்டிற்குள் நுளைய சிறிலங்கா அரசு அனுமதிக்கவில்லை. இதனால் ஐரோப்பிய ஒன்றியம் சீற்றம்டைந்தது தெரிந்ததே.

இந்த விசாரணைக்குழு தனது அறிக்கையில் சிறிலங்காவில் ஒட்டு மொத்தமாக நீதி மற்றும் குற்ற தடுப்பு நிர்வாகம் சீர்குலைந்து இருப்பதாகவும் அதே நேரம் அரசு ஆதரவு ஆயுத குழுக்கள் வயது குறைந்த சிறார்களை வலுக்கட்டாயமாக படையில் இணைத்தல்,ஆட்கடத்தல்,போன்றவற்
றில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தவிர 300 ஆயிரம் மக்களை தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருத்தல் மற்றும் போர்க்காலங்களில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அரசு இயந்திரங்கள் விசாரணைகளை மேற்கொள்ளும் போது குறித்த குற்றங்களில் அரசு படைகள் சம்பந்தப்பட்டிருந்தால் அந்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் மறைத்து விடுதல் அல்லது அழித்து விடுவதாகவும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.