புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகள் என புலம்பெயர் தமிழர்கள் செய்து வரும் பிரச்சாரங்களை ஏற்க முடியாது – ராஜீவ

Rajive Vijasinga Peaceதமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற ரீதியில் புலம்பெயர் தமிழர்கள் செய்து வரும் பிரச்சாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சில புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவாக மேற்கொண்டு வரும் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்குலக நாடுகள் கவனத்திற் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சி.என்.என். செய்தி சேவைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளை சில புலம்பெயர் தமிழர்கள் அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களையும் ஒரே விதமாக நோக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பான்மையான தமிழ் மக்கள் கடினமாக உழைக்கக் கூடிய மிகவும் கௌரவமான பிரஜைகள் என அவர் தெரிவித்துள்ளார்.
 
மேற்குலக நாடுகள் இலங்கையின் அபிவிருத்திக்கு காத்திரமான வகையில் பங்களிப்பு வழங்க வேண்டுமே தவிர, விமர்சனங்களை வெளியிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பணத்திற்காக சில ஊடகவியலாளர்கள் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இதன் காரணமாகவே ஊடகவிலயாளர்கள் வடக்கிற்கு செல்வதற்கான அனுமதி வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.