விடுதலைப்புலிகளின் உள்ளக விசேட விசாரணை பிரிவின் பொறுப்பாளர் அருள் மௌலி வவுனியா முகாமில் கைது என்கிறது குற்றத் தடுப்பு பிரிவு

விடுதலைப்புலிகள் அமைப்பின் உள்ளக விசேட விசாரணை பிரிவின் பொறுப்பாளராக இருந்ததாக கூறப்படும்  அருள் மௌலி என்பவர் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  வவுனியா குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர் மக்களுடன் முகாமில் தங்கியிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பல தரத்திலான தலைவர்கள், தலைவிகள் தொடர்பான தகவல்களை இவர், புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டம்மானுக்கு வழங்கும் பொறுப்பு அருள் மௌலிக்கு வழங்கப்பட்டிருந்தாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.