80 வீதமானோரை இவ்வருட இறுதிக்குள் குடியமர்த்திவிட முடியும் என்று தெரிவித்த அரசாங்கம் பின்னர் அதனை 60 வீதமாகக் குறைத்திருந்தது

amnesty2இடம்பெயர்ந்தவர்களுள் மேலும் ஒரு தொகையினரை மே 23 ஆம் திகதி அரசாங்கம் மீளக் குடியமர்த்தவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கெனவே 80 வீதமானோரை இவ்வருட இறுதிக்குள் குடியமர்த்திவிட முடியும் என்று தெரிவித்த அரசாங்கம் பின்னர் அதனை 60 வீதமாகக் குறைத்திருந்தது.

புதிதாக இடம் பெயர்ந்தவர்களோடு முன்னர் காலத்திற்குக் காலம் இடம் பெயர்ந்தவர்களையும் உள்ளடக்கியே 180 நாட்களுள் அவர்களைக் குடியேற்றப் போவதாக அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
சில குடும்பங்கள் பலவருடங்களாகவும் இன்னும் சில குடும்பங்கள் பல தசாப்தங்களாகவும் இடம் பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
 
கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 59000 பேரை இவ்வருட ஓகஸ்ட்டில் தாம் மீளக்குடியேற்றியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் புள்ளிவிபரங்களின்படி ஏப்.01இல் 266567 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஜுனில் இது 280000ஆக அதிகரித்தது. இவர்களுள் 250000 பேர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
 
அரசாங்கம் மூன்று கட்டங்களாக இடம் பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களையும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களையும் முதற்கட்டமாக மீளக்குடியேற்றுதல்.
 
அதனைத் தொடர்ந்து வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களை மீளக் குடியேற்றுதல், இறுதியாக விடுதலைப்புலிகளின் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மீளக்குடியேற்றப்படுவார்கள்.  ஜனாதிபதியின் அலுவலகம் இத்திட்டத்தின் இணைப்பாளராகச் செயற்படும்.
 
ஓகஸ்ட் இறுதியில் 6490 பேர் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு உறவினர் வீடுகளிலோ அல்லது முதியோர் இலல்ங்களிலோ தங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் முதியோரும் அங்கவீனர்களுமாவர்.
 
ஓகஸ்ட் 5இலிருந்து 28 வரை யாழ்ப்பாணம், மன்னார். திருமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 5123 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
ஓகஸ்ட் 26 800 இந்து மற்றும் கத்தோலிக்க குருமார் அவர்தம்குடும்பங்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளன. ஓகஸ்ட் 20இல் மட்டக்களப்பு மற்றும் திருமலையைச் சேர்ந்த 2006இல் இடம் பெயர்ந்த 130 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுடைய வீடுகள் உயர்பாதுகாப்பு வலயத்துள் இருப்பதால் அவர்களால் தமது வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை. அவர்கள் தற்போது பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.