சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ தொடர்பில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான பிரிவு ஆராய்வு

channel4அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான பிரிவு சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ கிளிப்பில் வெளியாகி உள்ள மனிதத்துவத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து அதனுடன் சம்பந்தப்பட்ட குற்றமிழைத்த கொடியவர்களை அடையாளம் காண வேண்டும் என அமெரிக்க செனட்சபை கேட்டுக் கொண்டுள்ளதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையில் மக்கள் படுகொலை செய்யப்படுவதான இவ்வீடியோ கிளிப் தொடர்பாக  தொடர்பாக அமெரிக்கா பரிசீலனையை மேற்கொள்ளும். அது இலங்கைக்கு அமெரிக்க இராணுவம் உதவி வழங்குவதைப் பாதிக்கும் என தாம் நம்புவதாகவும் சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
 
இதேவேளை சனல் 4இன் தலைமை அதிகாரி அன்டி டன்கன் தமது தொலைக்காட்சி இவ்வீடியோ கிளிப்பை வெளியிட்டமை சரியான முடிவு என்றும், இதனுடைய நம்பகத்தன்மை அல்லது உண்மைத்தன்மை குறித்து எங்களால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், இவ்வாறான ஒரு விடயம் மக்களின் பார்வைக்குச் செல்ல வேண்டும் என்றே நாங்கள் நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு முன்னதாக கடந்த வாரம் ஐநா செயலாளர் நாயம் பான் கீ மூன் இது தொடர்பாக இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் உரையாடியுள்ளார். ஐநாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி சுசான் ரைஸ் இது தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஐநாவின் சட்டபூர்வமற்ற படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த விசேட பிரதிநிதி  பிலிப் அன்டர்சன் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் இந்த வீடியோ கிளிப்பிற்கு எதிரான பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறது.
 
கடந்த 7ஆம் திகதி திங்கட்கிழமை இந்த வீடியோ கிளிப் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை பான இலங்கை அரசாங்கம் நடாத்தியது. அதில் தாம் இதனை ஆராய்ந்ததாகவும் இவ்வீடியோ கிளிப் போலியானது என்றும் அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இராணுவ மற்றும் சிவில் நிபுணர்கள் அதனை ஆராய்ந்து அது போலியானது எனத் தெரிவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.