செய்மதி படங்களை ஆதாரமாகக் கொண்டு இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்ற வழக்குத் தொடரத் திட்டம்

Innercite Press 1இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் வழக்குத் தொடர அமெரிக்க தமிழர் அமைப்பொன்று திட்டமிட்டுள்ளது.

செய்மதிப் படங்களை ஆதாரமாகக் கொண்டு இலங்கை உயரதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இனஒடுக்குமுறைக்கு எதிரான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் குறித்த தமிழ் தன்னார்வ தொண்டு நிறுவனம், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான செய்மதி ஆதாரங்களை திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அமெரிக்க பிரஜையான பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க குடியுரிமையுடைய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
 
யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட மே மாதம் 18ம் திகதிக்கு முன்னரும், அதற்கு பின்னரும் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
யுத்த சூன்ய வலயம் மற்றும் வைத்தியசாலை கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
 
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அமெரிக்க சட்ட திட்டங்களுக்கு அமைவாக வழக்குத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.