குறைபோசாக்கான இடைத்தங்கல் முகாம் குழந்தைகளுக்கு பாவனைக்கு ஒவ்வாத உணவு வழங்கப்பட்டுள்ளன

vilippu-nerudalஇடைத்தங்கல்  முகாம்களில் குறைபோசாக்கினால் அவதியுறும் சிறுவர் சிறுமியருக்கு பாவனைக்கு ஒவ்வாத உணவு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவர் சிறுவர் நல மருத்துவர் போஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களினால்  முகாம் சிறுவர் சிறுமியரது நிலைமை மேலும் மோசமடையக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
வெறும் மருந்து மாத்திரைகளினால் மட்டும் குறைபோசாக்கு நிலைமையை கட்டுப்படுத்த முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
போசாக்கான உணவு வகைகளை வழங்குவதன் மூலம் குறைபோசாக்கு நிலையை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
புரதம் செறிந்த உணவுப் பொருட்களை வழங்குவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
முகாம்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் குறைபோக்கினை நீக்கக் கூடியவை என தாம் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.