குமரன் பத்மநாதனிடம் பாகிஸ்தானியர்களும் விசாரணைகளை நடத்தத் திட்டம்

kpதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை நடத்த வேண்டுமென பாகிஸ்தானிய அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்தியா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கைக் கிரிக்கட் அணி மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில் கே.பி.யிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாகிஸ்தானிய அதிகாரிகள் கோரியுள்ளனர்.
 
இதன்படி, குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பாகிஸ்தானிய உயரதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு எதிர்காலத்தில் விஜயம் செய்யக் கூடுமெனத் எதிர்பார்க்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.