நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாலே சர்வதேச நாணய நிதியம் வழங்க இணங்கிய இரண்டாம் தவணை நிதி வழங்கப்படும் ‐ மத்திய வங்கிப் பேச்சாளர்

imf_loanகடனுதவியை வழங்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே, சர்வதேச நாணய நிதியம் வழங்க இணங்கியுள்ள, 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் இரண்டாம் தவணைக்கான நிதி வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை 7 வீதமாக குறைக்கப்பட வேண்டும். பெற்றோலியக் கூட்டுத் தாபனம் அல்லது இலங்கை மின்சார சபை ஆகியவற்றில் ஒன்றை இலாபம் பெறும் நிறுவனமாக மாற்றுதல், அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரிப்பதற்காக, நிவாரணங்களை ரத்துச் செய்தல், ஆகிய இந்த நிபந்தனைகளில் சில எனவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
 
தமது இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் சிலர் கடந்த 8 ஆம் திகதி இலங்கைக்கு சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.