ஈழத்துக்காக அனைவரும் குரல் கொடுக்கும்போது பாரதிராஜாவின் மௌனம் கலையும்: சேரன்

 CheraInterviewதமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது கண்டு பாராதிராஜா மௌனம் காக்கிறார் என்றும், ஈழத்தமிழர்களுக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கும்போது பாரதிராஜாவின் மௌனம் கலையும் என்றும் இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

அமீர் தயாரித்து நடித்துள்ள யோகி படத்தின் இசை வெயியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சேரன்,

எங்களை போன்ற இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனரான பாரதிராஜா, இந்த நிகழ்ச்சியில் மேடை ஏறாமல் கீழே அமர்ந்திருக்கிறார். அவர் சமீப காலமாக எந்த பொது மேடை மற்றும் திரையுலக நிகழ்ச்சி மேடைகளிலும் ஏறாமல் மௌனம் காத்து வருகிறார். அவருக்கு ஏன் இந்த கோபம்? அவர் திரையுலகில் சாதிக்க வில்லையா? பிறகு ஏன் இந்த கோபம்? உண்மையில் அவருக்கு யார் மீதும் கோபம் இல்லை. அவர் விரதம்போல மௌனம் காத்து வருகிறார்.

தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது கண்டும், தமிழர்கள் ரோஷம் இல்லாமல் இருப்பதாலும் மௌனம் காக்கிறார். அவரது சாதனைகளுக்கு தலை வணங்கியது போல அவருடைய மௌனத்திற்கும் தலை வணங்குகிறேன்.

இலங்கையில் வாடும் இலட்சக்கணகக்கான தமிழர்கள் வாழ்வுக்காக இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கும் போது பாரதிராஜாவின் மௌனம் கலையும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.