தமிழீழ புலனாய்வு பிரிவின் முக்கிய நபர் தீபனைக் காணவில்லை என்கிறது இலங்கை புலனாய்வு

ltte_emblemவவுனியா மெனிக்பார்ம் முகாமில் இருந்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.
 
கொழும்பு, மன்னார், வவுனியா பிரதேசங்களில் செயற்பட்டு வந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான லெப்டினட் கேர்ணல், தீபன் என்ற நாகேஷ் சுடர்தீபனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவர் இடைத் தரகர்களுக்கு 6 லட்சம் ரூபா பணத்தை கொடுத்து முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
புலிகளின் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர் என கருதப்படும், தீபனின் மனைவியான சோபா என்பவர், புலிகளின் மருத்துவராக சேவையாற்றி வந்துள்ளார்.
 
தீபன் வெளிநாடு செல்லும் நோக்கில் முகாமில் இருந்து தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் எனினும் அவர் இதுவரை நாட்டை விட்டு வெளியேறவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளதால், அவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.