மூன்று மாத காலப்பகுதிக்குள் அரசாங்கம் கவிழ்க்கப்படும் ‐ திஸ்ஸ அத்தநாயக்க

Tissa_UNP_2இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள் அரசாங்கம் கவிழ்க்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் தென் மாகாணசபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி அடையும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய ராஜபக்ஷ அரசாங்கம் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.