தங்கள் மீதுள்ள வெறுப்பை டேவிட் மிலிபேண்ட் செனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார் – இலங்கை அரசாங்கம்

david miliband

david miliband

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியின் உரிமையாளர் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபேண்ட் என இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்புக்காக பேசும் நோக்கில், மிலிபேண்ட் இலங்கை வந்திருந்த போது, அவரது உள்நோக்கத்தை அறிந்து கொண்ட அரசாங்கம்,அவரை திருப்பி அனுப்ப உத்தரவிட்டதாகவும் அதற்கு பழிவாங்கும் நோக்கில் அவர் செனல் 4 தொலைக்காட்சி ஊடாக இலங்கை இராணுவத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், பொய்யை புனைந்துள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
 
இலங்கைப் படையினரால் சில தமிழ் இளைஞர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ படங்களை செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டமை தொடர்பாகவே இலங்கை அரசாங்கத்தின் மேற்கூறிய பேச்சாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.