சர்வதேச பயங்கரவாத வலைப்பின்னல்களுடன் புலிகளை பிணைக்கும் சிங்கள அரசின் சதி தொடர்கின்றது

ltte_logoசிறிலங்கா அரசு  விடுதலைப்புலிகளை ஒடுக்கிய பின்னர் புலம்பெயர்னாடுகளில் உள்ள தமிழர் செயற்பாடுகளை தகர்ப்பதற்கும்,விடுதலைப்புலிகள் மீதான தடைகளை தொடர்ந்தும் பேணுவதற்கும் ஏதுவாக அண்மைய காலங்களில் சர்வதேச பயங்கரவாத வலைப்பின்னல்கள் மற்றும் சர்வதேச பயங்கரவாத தாக்குதல்களிலும் சம்பந்தப்படுத்தும் கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றது.

சிறிலங்கா அரசு மட்டும் அன்றி அயல் நாட்டு அரச பயங்கரவாதங்களும் தமது சொந்த நலன்களுக்காக தமது சதிமுயற்சிகளுக்கு எல்லாம் புலிகள் மீது பளிசுமத்தும்  நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையிலேயே பாகிஸ்தானில் இலங்கை கிறிக்கெற் அணிமீதான தாக்குதல், தலிபான்களுடனன தொடர்பு என இப்போது திட்டமிட்டு தகவல்களை கசிய விட்டு கொண்டிருக்கின்றது சிங்கள அரசு.

இதற்காகவே பல்வேறு பல்கலைக்கழகங்களில் மணவர்களை பயிற்றுவித்து, பயங்கரவாததில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என கூறி அவர்கள் ஊடாகவே கட்டுரைகள், அறிக்கைகள் வெளிவிடப்படுகின்றன. பின்னர் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அதனை வழங்கி  நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டுகின்றன.

தற்போது திரு பத்மனாதன் அவர்கள் 2001 ம் ஆண்டு காபுல் ஊடாக பயணங்களை மேற்கொண்டதான தகவல்களை வைத்து தலிபான்கள் உடன் விடுதலைப்புலிகளுக்கு  நெருக்கமான தொடர்புகள் இருந்ததாக புகார்களை வெளியிட்டுள்ளது சிங்கள அரசு.

இவ்வாறு சிங்கள அரசும் அதன் அயல்னாட்டு பயங்கரவாத அரசுகளும் விடுதலைப்புலிகள் என்ற பேரில் பல்வேறு பயங்கரவாத நடவடிகைகளை கூட செய்ய துணிவதுடன் நடந்து முடிந்த பயங்கரவாத தாக்குதல்களிலும் புலிகளை சம்பந்தப்படுத்தி  தமது அரச பயங்கரவாத செயற்பாடுகளை திசைதிருப்பவும் முயற்சிக்கலாம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.