தஞ்சாவூரில் ஒருவர் தீக்குளிப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள சொக்னாவூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் ஈழத்தமிழருக்காக உயிர்விடுகிறேன் என்று கூறிக்கொண்டு தீக்குளித்தார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீக்குளித்ததில் இடுப்புக்குக் கீழே தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.