முப்படையைச் சேர்ந்த 60000 பேர் தப்பி சென்றுள்ளனர் – இது தப்பலா? அல்லது கடைசி யுத்தத்தில் புலிகளால் கொல்லப்பட்டவர்களா?

uthayaஇராணுவம் மற்றும் கடற்படையிலிருந்து தப்பியோடிய 18400 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

15400 இராணுவப் படைவீரர்கள் கௌரவமான முறையில் பதவி விலகுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் 24ம் திகதி வரையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் கௌரவமாக பதவி விலகுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, சுமார் 3000 கடற்படை வீரர்கள் பொது மன்னிப்புக்காக விண்ணப்பித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
முப்படையைச் சேர்ந்த 60000 பேர் தப்பிச் சென்றுள்ளதாக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.