தமிழீழத்திற்காக தமிழகம் உண்ணாவிரதம்

tamilnadu-tamileelam-nerudalஇலங்கையில் போருக்குப் பின்னர் மூன்று லட்சம் வடக்கு மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள்.  உலகெங்கிலும் அவர்களை விடுவிக்கக் கோரி கோரிக்கைகளும் போராட்டங்களும் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் சமீபகாலமாக பலதரப்பினரும் போராடத் துவங்கியுள்ளனர்.

எதிர்வரும் 25‐ஆம் திகதி வடக்கு மக்களை விடுவிக்கக் கோரி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதன் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் முடிவு செய்துள்ளது.
 
இம்மன்றத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மன்றப்பொருளாளர் வி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் த.லெனின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
இந்தக் கூட்டத்தில் இலங்கையில் போர் முடிந்த நிலையிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகின்றனர். இப்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் முகாம்களில் உள்ளவர்கள் உணவு, குடிநீர், சுகாதார வசதி கிடைக்காமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 
எனவே அவர்களை உடனடியாக முகாம்களைவிட்டு விடுவிக்க வேண்டும். அவரவர் சொந்த ஊர்களில் குடியேற அனுமதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் செப்டம்பர் ‐25ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.