தமிழர்கள் மீண்டும் ஆயுதம் எடுக்கும் காலம் நெருங்கியுள்ளது

vigrama-Bhahu_150இனப்பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் தீர்வெதனையும் முன்வைக்கவில்லை என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக மீண்டும் போராட்டங்களை மேற்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற நிர்வாகம் காரணமாக நாட்டின் பல துறைகள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. உழைக்கும் மக்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதன் மூலம் இது மிகத் தெளிவாக புலப்படுகிறது.
 
உழைக்கும் மக்களை மறந்து பொருளாதார கொள்கைகளை செயற்படுத்தியதால், அதன் பிரதிபலன்களை அனுபவிக்க வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார நிர்வாகத்திற்கு எதிராக, உழைக்கும் மக்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளதாகவும் விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.