மன்னார் கடலடிப் படுக்கையின் எண்ணெய் வளம் இந்தியாவிடம் தாரைவார்ப்பு!

question-mark1aமன்னார் கடலடிப் படுக்கையில் பொதிந்து கிடக்கும் எண்ணெய் வளத்தை இந்தியாவிடம் தாரைவார்ப்பதற்கான நடவடிக்கைகளில் முழுவீச்சுடன் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.

எண்ணெய் வள அகழாய்வுக்கான முதலீடுகள் ஊடாக இவ்வாண்டின் இறுதிக்குள் குறைந்தது நூறு கோடி டொலர்களை ஈட்டுவதற்கு திட்டமிட்டிருக்கும் சிறீலங்கா அரசு, மன்னார் கடலடிப் படுக்கையின் முதன்மைத் தொகுதிகளை இரண்டு இந்திய நிறுவனங்களிடம் குத்தகைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (15.09.2009) மும்பைக்கு பயணம் செய்யும் சிறீலங்கா முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சரும், காமினி திசநாயக்கவின் புதல்வருமான நவீன் திசநாயக்க, இது தொடர்பாக இரண்டு இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.