விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறி கொழும்பு என்கிறது பாதுகாப்புத்தரப்பு

colunகொழும்பிலும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலும் தொடர்ந்தும் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிப் பொருட்களை தாம் மீட்டு வருவதாக மேல் மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை வழி நடத்தும்புலிகளின் உறுப்பினர்கள் இன்னும் கொழும்பிலும் அதனை சுற்றிவுள்ள பிரதேசங்களிலும் மறைந்துள்ளனர்.

இதன் காரணமாக அரசாங்கத்தின் நிகழ்வுகளின் போது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொழும்பில் நடைபெற உள்ள இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் மனோ பெரேரா கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் இராணுவத்திற்கு வழங்கிய தைரியத்தை ஒத்துழைப்புகளை மதிப்பதாகவும் அனைவரது பாதுகாப்புக்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் பெரேரா கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.