விடுதலைப் புலிகளுக்கு ரஷ்ய நிபுணர்கள் பயிற்ச்சி அளித்தனராம்: இலங்கையின் இந்த நாடகம் எதற்காக?

question_3d1தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த விசேட படையினரால் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2004 ம் ஆண்டு சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிக்குப் பயணம் செய்த ஓய்வுபெற்ற ஐந்து ரஷ்யாவைச் சேர்ந்த விசேட படை அதிகாரிகள், துப்பாக்கி சுடுதல், வாகனங்களை ஓட்டுதல், சொற்ப நேரத்திற்குள் வாகனங்களை பொருத்துதல் மற்றும் வாகனங்களை கூறுகளாக அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கியதாக இலங்கை புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பயிற்சி நடவடிக்கைகளில் தமிழீழ தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு அணியை சேர்ந்த முப்பத்தைந்து பேர் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழருக்கெதிராக செயல்ப் படும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று, அப்படி இருக்கும் பொழுது இலங்கையின் இந்த திடீர் அறிக்கை எதற்காக?

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.