தமிழீழ தேசியத் தலைவரின் படத்தை அகற்றினால் தீக்குளிப்போம்: சீமான்

இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் புதுக்கோட்டையில் இன்று நடக்கிறது. கலந்துரையாடலுக்கு வந்த சீமான் மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினர் படத்தை அகற்றினால் தீக்குளிப்போம் என்றனர் ஆவேசமாக.


 இதை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை முழுவதும் பிரபாகரன் -சீமான் இணைந்து இருப்பது மாதிரியான தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. போலீசார் இவற்றை இரவோடு இரவாக அகற்றிவிட்டனர்.

இன்று கலந்துரையாடல் நடைபெறும் புதுக்கோட்டை மதுரை சாலையில் உள்ள எஸ்.எஸ்.மகால் முன்பு பிரபாகரன் -சீமான் இணைந்திருப்பது மாதிரியான படம் வைக்கப்பட்டிருந்தது.

டி.எஸ்.பி.சாமிநாதன் இந்த படத்தை அகற்ற உத்தரவிட்டார்.

பின்னர் டி.எஸ்.பி., சரி இங்கே மட்டும் படம் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

தற்போது நாம் தமிழர் இயக்கத்தின் கலந்துரையாடல் நடக்கிறது.

ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் தீர்வு

இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம்தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என தூத்துக்குடியில் சீமான் கூறினார்.

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட இளைஞர் பணிக்குழு மற்றும் கிறிஸ்துவ வாழ்வுரி்மை இயக்கம் சார்பில் கருத்தரங்கம் தூத்துக்குடி சின்னகோவில் வாளகத்தில் உள்ள ரோச் மண்டபத்தில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்,

தமிழீழ தேசியத் தலைவருடன் சீமான்

தமிழீழ தேசியத் தலைவருடன் சீமான்

உலகத்தில் எங்கும் நடக்காத இனப்படுகொலை இலங்கையில் நடந்து வருகிறது. தற்போது கிறிஸ்துவ மத தலைவர்கள் இப்பிரச்சனையை கையில் எடுத்திருப்பதால் உலக நாடுகள் திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளன.

இலங்கையில் புலிகளை அழித்து விட்டோம் என்று உலக நாடுகளிடம் தெரிவித்து வரும் ராஜபக்ச அரசு தமிழர்களுக்கு சம உரிமை, அதிகார பகிர்வு அளிக்கப்படும் என கூறி வருகிறார். ஆனால் அது ஓருபோதும் நடக்காது.

தற்போது புலிகள் மீது சில நாடுகள் பயங்கரவாத இயக்கம் என கூறி ஆதரிக்கவில்லை. விரைவில் இலங்கை அரசின் உண்மை நிலையை உலக நாடுகள் உணர்ந்து தமிழர்களுக்கு தனி ஈழம் தான் நிரந்தர தீர்வு என்ற முடிவுக்கு வரும்.

இதற்கு உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அவர்களை ஒன்றுபடுத்தும் பணியில் நாம் தமிழர் இயக்கம் ஈடுபடும் என்றார் சீமான்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.