நான்கு வருடங்களில் மிகப்பெரிய ஈழ போராட்டம் வெடிக்கும்: சீமான்

Seemanஇயக்குநர் சீமான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார்.  இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது.

முன்னதாக அவர் புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், ’’தேசிய இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தைத்தான் பிரபாகரன் நடத்திவந்தார்.அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம்.

இனி போராடி பலனில்லை என்று சில அமைப்புகள் கொஞ்சம் அமைதி காக்கின்றன.  ஆனால் நாம் தமிழர் இயக்கம் அமைதியாக இருக்காது.

பொதுவாக நேற்று வரை நடந்து வந்த ஈழ போராட்டத்தில் இப்போது சிறிது இடைவெளி இருக்கு.  இன்னும் நான்கு மாதங்கள் அல்லது நான்கு வருடங்களில் ஈழ போராட்டம் முன்பை விட பெரிய அளவில் வெடிக்கும்.

தனித்தமிழ் ஈழம் தான் தீர்வு;அந்த தீர்வை நோக்கி போராட்டம் தொடரும்’’என்று தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.