தடுப்புமுகாம்களிலுள்ள மக்களை உடன்விடுவிக்குமாறுகோரி நெதர்லாந்தில் பல்லினமக்களிடம் வீடுவீடாக கையெழுத்துச்சேகரிப்பு

110_3433தாயகத்தில் பல தடுப்புமுகாம்களிலுள்ள அனைத்துதமிழ்மக்களையும் உடன்விடுவிக்குமாறும்  போர்க்குற்றம்புரிந்த மகிந்தஅரசை அனைத்துலக குற்றவியல்நீதிமன்றில் விசாரணைசெய்யக்கோரியும் நெதர்லாந்தின் பலநகரங்களில் வீடுவீடாகவும் பள்ளிக்கூடங்கள், வேலைத்தளங்கள், முக்கியமான இடங்கள் என பரவலாக தமிழ்மக்களால் பல்லினமக்களிடம்  கடந்தமாதத்திலிருந்து கையெழுத்துச் சேகரிக்கப்பட்டுவருகின்றது.  இக்கையெழுத்துக்களின் பிரதிகளை  ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்துஅரசு,  அமெரிக்கஅரசு, அனைத்துலக குற்றவியல்நீதிமன்றம், ஐ.நா சபை போன்றவற்றிற்கு; இதுபற்றி உடன்டிநடவடிக்கை எடுக்குமாறு கோரி அனுப்பிவைக்கப்படவுள்ளன.  எனவே, 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் தேவையாகவுள்ளதால் இக்கையெழுத்துக்களைப்பெற பலதொண்டர்கள் இன்னும் நிறையத்தேவையாகவுள்ளனர்.

இக்கையெழுத்துக்களை பெற்றுத்தரவிரும்புபவர்கள் உடனடியாக நெதர்லாந்துத்தமிழ்அமைப்புக்களின் கூட்டமைப்பின், மக்கள் தொடர்பாளரிடம்  தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்பாளர்: தமிழினி: 0649343746

இன்றைய வரலாற்றுக்கடமையை உணர்;வோம் !
தடுப்புமுகாம் மக்களை விடுவிப்போம் !
நெதர்லாந்துத் தமிழ்அமைப்புக்களின் கூட்டமைப்பு

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.