23-09-09: நெதர்லாந்தில் வெளிநாட்டமைச்சின் முன்றலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

எதிர்வரும் 23. 09. 2009 புதன்கிழமை அன்று பிற்பகல் 2 மணியிலிருந்து 4 மணிவரை நெதர்லாந்தில் டென்காக் நகரிலுள்ள வெளிநாட்டமைச்சு வளாகமுன்றலில் இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.

தாயகத்தில் முட்கம்பிவேலிகளுக்குள் சித்திரவதைப்படும் தமிழ்மக்களை உடன்விடுவிக்குமாறும்
போர்க்குற்றங்களிற்காக சிறீலங்காஅரசை விசாரணை செய்யுமாறும் நடாத்தப்படும் இவ்வொன்றுகூடலில் பெருந்திர‌ளாக அணிதிரளுமாறும் நெதர்லாந்தின் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.

இவ் ஒன்றுகூடலின்போது நெதர்லாந்தின் பல இடங்களிலும் இதுவரை சேகரிக்கப்பட்ட கையெழுத்துப்படிவங்களும் வெளிநாட்டமைச்சின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும்.
நெதர்லாந்துத் தமிழ்அமைப்புக்களின் கூட்டமைப்பு

holland notice

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.