நவீன கால ராவணனாக ராஜபக்சே இருக்கிறார்: விஜயகாந்த்

இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.காலை 9மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை முடிவடைகிறது.

விஜயகாந்த் உண்ணாவிரதத்தின் போது செய்தியாளர்க்ளுக்கு பேட்டி அளுத்தார். ‘’நாடு முழுவதும் தீமையை அளிக்கும் தசரா ‌கொண்டாடப்படுகிறது.

நேற்று பிரதமரும் , காங்., தலைவர் சோனியாவும் தசராவில் கலந்து கொண்டனர். ராவணன் வதத்தை பார்த்தனர். நவீன கால ராவணனாக ராஜபக்ஷே இருக்கிறார்.

இலங்கை கடற்படையினர் மீது எப்போது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகின்றனர். மீனவர்களுக்கு ஏன் இந்திய கடற்படை பாதுகாப்பு கொடுப்பதில்லை’’ என கேள்விகளை எழுப்பினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.