அரசாங்கம் நாட்டையும் மக்களையும் பாதாளத்துக்குள் தள்ளியுள்ளது – ஐ.தே.க. குற்றச்சாட்டு

unplogoதிறைசேரியின் நிதியையும் மக்களின் வரிப்பணத்தையும் கொள்ளையிடும் அரசாங்கத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை மூடிமறைப் பதற்காக அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது தேர்தல்களைச் சுட்டிக்காட்டி ‘கண க்கு வாக்கெடுப்பை’ முன்வைக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சி ஒரு போதும் வெற்றியளிக்காது என்று ஐ.தே.க. எம்.பி. கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

பாரியளவான நிதி மோசடி, நிர்வாக முறைகேடுகளினால் அரசாங்கம் பொது மக்களையும் நாட்டையும் பாதாளத்துக்குள் தள்ளியுள்ளது என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாட்டுக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கி விட்டது. எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தின் உண்மையான தோற்றம் தெரியவரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற போதே கபீர் ஹாசிம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவர் இங்கு தொடர்ந்தும் கூறியதாவது:

அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் பொதுமக்களிடமிருந்து வரிகளை அறவிடுகின்றது. ஆனால் அறவிடப்படும் வரிப் பணங்கள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றது என்பதில் பாரியளவிலான அதிர்ச்சியே காணப்படுகின்றது.

பொது மக்களின் வரிப்பணங்களை நாட்டின் அபிவிருத்திக்காகவோ, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவோ இந்த அரசாங்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தவில்லை. மாறாக அரசாங்கம் தமது சுய தேவைகளுக்காகவே இதுவரையில் மக்கள் நிதியினை பயன்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிகள் அதிகரித்து காணப்படுகின்றது.

பொருட்களின் விலைகளை விட அரசாங்கத்தின் வரிகளே மிக அதிகமாக காணப்படுகின்றது. அறவிடப்பட்ட வரிகளின் மொத்தத் தொகையைக் கொண்டு உள்நாட்டில் போதுமான அளவு அபிவிருத்திப் பணிகளை வெளிநாடுகளின் கடனை பெறாமல் மேற்கொண்டிருக்கலாம்.

ஆனால் அரசாங்கமோ மக்களின் வரிப் பணத்தை சூறையாடியது போதாதென்று 252 கோடி ரூபாவிற்கு மேலும் குறைநிரப்பு பிரேரணையை கொண்டு வருகின்றது. இத் தொகைக்காக அரசாங்கம் முன் வைக்கும் காரணம் அமைச்சர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு நிதி தேவை என்பதாகும்.

அமைச்சர் ஒருவரின் மாதச் செலவு அரசாங்கத்தின் கணக்கின்படி 12 கோடி ரூபா இதைத் தவிர அரச நிறுவனங்களின் தலைவர்கள் திறைசேரியின் நிதியினை கொள்ளையிடுவதாக அரச அமைச்சர் ஒருவரே அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதைத் தவிர “”மகநெகும” வேலைத் திட்டத்தில் பாரிய மோசடிகள் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா விமான சேவை 2008 இல் இலாபம் ஈட்டிய போதும் 2009 இல் பாரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேயிலை, இறப்பர் போன்ற ஏற்றுமதி பொருட்களின் விலையும் உற்பத்தியும் பாரியளவில் வீழ்ச்சியடைந்து விட்டது.

பாரியளவிலான நிதி மோசடிகள், நிர்வாக முறைகேடுகளினால் அரசாங்கம் பொது மக்களையும் நாட்டையும் பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. இனி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அரசாங்கத்தின் எஞ்சிய வேலைத் திட்டங்களும் தெரியவரும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.