ராஜபக்சேவை பழிவாங்க 100 பிரபாகரன்கள் வருவார்கள்: மங்கள சமரவீர

2064Mangala_Press_Jஇலங்கை அதிபர் ராஜபக்சே தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பழிவாங்குவதற்கு 100 பிரபாகரன்கள் உருவாகி வருவார்கள் என்றும், பிரபாகரன்கள் மட்டுமல்லாது சிங்களச் சமூகத்தினர் அனைவருமே அவரைப் பழிவாங்குவார்கள் என்றும் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள விகாரமாதேவி திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ராஜபக்சேவால் ஒருபோதும் தமிழர்களின் மனங்களை வெல்ல முடியாது எனத் தெரித்தார்.

வன்னியில் உள்ள தடுப்பு முகாம்களின் படிப்படியாக மோசமாகி வரும் நிலை அங்கு மீண்டும் பிரிவினைவாத இயக்கம் ஒன்று உருவாகுவதற்கான ஊக்கத்தை வழங்கப்போகிறது.

இந்த நாட்டில் ஊடக சுதந்திரமோ, அரசியல் சுதந்திரமோ கிடையாது. எதிர்க்கட்சியினருக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளுக்ககாக சட்டமும், காவல்துறையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

‘சண்டே லீடர்’ வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவைக் கொன்றவர்களையும் ‘சிரச’ தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்தியவர்களையும் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த காவல்துறையினர் தவறிவிட்டனர் என்றும் மங்கள சமரவீர குற்றம்சாட்டினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.