மீனவர்கள் எல்லை தாண்டும் குற்றவாளிகளா?

question_3dஎல்லா நாடுகளிலும் கடலும் மலையும் ஒரு எல்லையாக உள்ளது. மலையை அண்டிய நீண்ட தூர சமவெளிப்பகுதிகளும் எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. சமவெளிகளில் கம்பி வேலிகளை அமைத்து அதில் பிரகாசமான விளக்குகளை எரிய விடுவதோடு ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை ஊடுருவல் உள்ள எல்லைகள் என தாங்கள் நினைக்கும் பகுதிகளில் நிறுத்தி வைக்கிறது அந்த நாட்டு அரசுகள்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ஊடுருவும் மக்கள் சில காரணங்களுக்காக ஊடுருவுகிறார்கள். சொந்த நாட்டில் பாதுகாப்பில்லாத சூழலிலும் பிழைப்புக்கு வழியில்லாமல் போகும் போதும் ஊடுவுருவும் மக்களைக் கடந்து கடத்தல்காரர்களும் உளவு வேலைகளுக்காக பய்னபடுத்தப்படும் அப்பாவிகளும் இவ்விதமாய் ஊடுருவுகிறார்கள்.

சமவெளிப்பகுதிகளில் அதிக அளவாய் நடக்கும் இம்மாதிரியான புலப் பெயர்வைக் காட்டிலும் கடல் வழியே ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குள் தஞ்சம் தேடி நிராதரவான முறையில் செல்வதென்பது உயிராப்பத்துக்கள் நிறைந்தது. எண்பதுகனில்; எத்தனையோ ஈழ மக்கள் இவ்வாறு இடப்பெயர்வின் போது பனியாறுகளில் சிக்கி பலியானதாக நான் வாசித்ததுண்டு. சில இலக்கியப் பதிவுகளும் இது குறித்து இருக்கிறது.

ஆனால் மீனவர்கள் இப்படியாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஊடுருகிறவர்களா? என்கிற கேள்வி தற்காலத்தில் எழுகிறது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை தாக்கி சித்திரவதை செய்வதும் பல நேரங்களில் சுட்டுக் கொல்வதும் வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது.

இலங்கை கடற்படையின் இத்தகைய அத்துமீறல் போருக்குப் பின்னராவது முடிவுக்கு வரும் என்று நாம் எதிர்பார்த்தோம் ஆனால் இலங்கை அரசு இனி கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் உரிமை கொண்டாடவோ மீன் பிடிக்கவோ வலைகளை உலர்த்தவோ உரிமை இல்லை என்பது மாதிரி தொடர் தாக்குதலை தமிழக மீனவர்கள் மீது நடத்தி வருகிறது.

தமிழக மக்களின் உரிமையை உறுதிப் படுத்த வேண்டிய மத்திய அரசோ இலங்கை அரசோடு சுமூகமான உறவு வளர்த்துக் கொள்கிறதே தவிற தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறீத்து உபயோகமாக இன்று வரை வாயே திறக்கவில்லை. ஆஸ்திரேலியால் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வட இந்திய ஆங்கில ஊடகங்கள் இனவெறித் தாக்குதலாக சித்தறித்த சூழலில் அதற்காக இந்திய அரசின் அதிகார பீடங்கள் பதறித்துடித்துப் போனது ஆனால் முப்பதாண்டுகலமாக தாக்கப்படும் தமிழக மீனவர்கள் குறீத்து மௌனம் சாதிக்கிறது இந்தியா.

ஒவ்வொரு முறை வேலை நிறுத்தம் செய்து தாங்கள் இனி தாக்கப்பட மாட்டோம் என்ற உத்திரவாதத்தைக் கேட்கும் மீனவர்களுக்கு தமிழக அரசு வேலை நிறுத்தம் கைவிடப்பட்டால் சரி என்கிற அளவில் பெருமளவு அந்நியச் செலவாணி ஈட்டும் மீனவர்களுக்கு  சில வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களை கடலுக்குள் தொழில் செய்ய தள்ளி விடுகிறதே தவிற இன்றைக்கு வரை உருப்படியான எந்த பாதுகாப்பும் இல்லை.
 
நீண்டகால வரலாற்று நோக்கில் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தோன்ற இம்மாதிரி தொடர் அடக்குமுறைகளே காரணமாக இருந்தது என்னும் சூழலில் தமிழக இந்திய அரசுகள் மீனவ மக்களை காக்கத் தவறும் என்றால் இயல்பாகவே மீனவ மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அப்படி ஒரு சூழல் எழும் போது அது அண்டை நாடொன்றினால் ஏற்படும் அச்சுறுத்தலாக இல்லாமல் இலங்கையில் நடந்தது போலவே உள்நாட்டு கலகமாகவே இருக்கும்.

மீனவர்கள் தொடர்பான எல்லைப் பிரச்சனையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்கிற பரபரப்பு எப்போதெல்லாம் தமிழகத்தில் எழுகிறதோ அப்போதெல்லாம் சில இலங்கை மீனவர்களை தமிழக அரசு கைது செய்கிறது. இது தமிழகத்தில் பாதிக்கப்படும் மீனவர்களை சாந்தப்படுத்தும் முயர்ச்சி ஆனால் இது எவளவு அநீதியானது. இலங்கையில் இருக்கும் அரசு என்பது இராணுவச் சர்வாதிகார அரசு அதற்கு தமிழ் மக்களைப் பற்றி துளியும் கவலை இல்லை சிங்கள மக்களைப் பற்றி கூட கவலை கிடையாது. அரசை ஆதரிப்பவர்களை மட்டும் வைத்து கொண்டு அது மிக மோசமான ஜனநாயகப் படுகொலையில் ஈடு பட்டுவருகிற சூழலில் தமிழகத்தில் கைது செய்யபப்டும் இலங்கை மீனவர்கள் குறீத்து அது பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை.

ஆனால் தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படையின் செயல் எவளவு வன்மையாக கண்டிக்கப் படவேண்டியதோ அது போலத்தான் இலங்கை மீனவர்களை கைது செய்வதும் வன்முறையான ஒன்று.

இம்மாதிரி கைதுசெய்யப்பட்டு பிரிதொரு நாட்டின் சிறைகளில் வாடும் மீனவர்களின் நிலை படு மோசமானது சமீபத்தில் கூட இலங்கை மீனவர் வெங்கடேசன் என்பவர் சென்னை புழல் சிறையில் இருந்து போனார் அவர் மீது போதைப் பொருள் கடத்தல் குற்ற்ச்சாட்டு உள்ளது. அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு கைதிக்கே உண்டான உரிமைகளை மறுக்கிற சிறை நிர்வாகம் வெங்கடேசனுக்கு இருந்த உயர் ரத்த அழுத்தத்திற்கு தவறான சிகிச்சை வழங்கியதன் மூலம் அவருக்கு மரணம் நேர்ந்திருக்கிறது.

தமிழக மீனவர்களாக இருந்தாலும் சரி இலங்கை மீனவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் எல்லை தாண்டும் குற்றவாளிகள் அல்ல. அப்படி எந்த நாடும் கடலில் வெள்ளைக்கோடு கிளித்து கடல் எல்லையை வரையறுக்கவும் இல்லை. அப்படியே வரையறுத்திருந்தாலும் மீன்  பிடித்தொழிலுக்கு இது பொருந்தாது. அவர்கள் மீன் பிடித் தொழிலாளர்கள் அந்நியசெலவாணியை ஈட்டிக் கொடுப்பவர்கள் என்கிற நிலையில் அவர்கள் மீது பரஸ்பரம் கரிசனம் காட்டப்பட வேண்டும்.

 கச்சத்தீவு என்பது இரு நாட்டு மீனவர்களுக்குமே தொழில் ரீதியாக கேந்திர முக்கியத்துவமானது என்கிற நிலையில் இந்திய இலங்கை அரசுகள் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.போருக்குப் பிந்தைய நிலையில் இந்தியா கச்சத்தீவு குறித்து பேச மறுக்கிறது. இலங்கை கச்சத்தீவின் முழு உரிமையையும் தான் எடுத்துக் கொள்ள நினைக்கிறது. உண்மையில் கச்சத்தீவு இரு நாடுகளில் முக்கிய தலமாகும் இந்தப் பிராந்தியத்தில் அந்நிய சக்திகளின் ஊடுறுவலை தடுக்க இப்பகுதி மீனவர்களின் கைகளில் சுதந்திரமாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது மனநிலை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.