ராஜபக்செ போர்க்குற்றவாளி: அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர்

elinஇலங்கை அதிபர் ராஜபக்செ மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கையில் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டு திரும்பிய அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவரும் மனித உரிமை ஆர்வலருமான எலின் ஷான்டர், இலங்கையில் தமிழர்கள் 3.50 லட்சம் பேர் அடைத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்குள்ள நிலை குறித்து உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகளுக்கு தெரிவித்து அவர்கள் மறுவாழ்வுக்கு குரல் கொடுத்து வருகிறார். தமிழகத்தில் அவர் கலந்கொள்ள வரவிருந்த நிலையில் அவருக்கான இந்திய விசாவை திடீரென அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனால் அவர் தமிழகம் வரமுடியாமல் போனது இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில்  இலங்கை தமிழர்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது இதில் அமெரிகாவிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ்சிங் முறையில் எலின் ஷான்டர் பேசினார். அப்போது அவர் மேலும் கூறியது..”ஈழத்தமிழர் இனத்தை அழிக்கும் நோக்கத்தில் இலங்கை அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இராணும் திட்டமிட்டு தமிழர்களை படுகொலை செய்துவருகிறது. இலங்கைத்தமிழர்களை இலங்கை யூதர்கள் என்று கூறலாம்.

1940 ஆம் ஆண்டு போலந்து நாட்டின் சித்திரவதை முகாம்களில் எப்படி யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ அதே போல ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். குடும்பம் குடும்பமாக ஈழத்தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். தற்போது மட்டும் முகாமில் உள்ள 10 ஆயிரம் ஈழத்தமிழர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்களை இராணுவம் படுகொலை செய்திருக்கும். முகாம்களில் 35 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர்.  இவர்களில் 1,800 பேர் தாய் தந்தையை இழந்து அனாதைகளாக்கப்பட்டுள்ளர்.

அந்த குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.  அவர்களை பராமரித்துவந்த சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம், ஐ.நா.சபையின் குழந்தைகள் உதவி நிறுவனங்களை இலங்கை அரசு வெளியேற்றி விட்டது.  ராஜபச்செ ஒரு போர்க்குற்றவாளி, கொசாவோ நகரில் மக்களை படுகொலை செய்த மிலோசெவிக், சூடான் பஷீர், லிபியா அதிபர் கடாபி ஆகியோர் போல இலங்கை அதிபர் ராஜபக்செவும் தமிழர்களை படுகொலை செய்துள்ளார். அவரை போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஐ.நா.சபையும் உதவ மறுக்கிறது.

உலகின் எந்த நாடும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை. தமிழகத் தமிழர்களும் உதவி செய்யாமல் விட்டுவிட்டால் வேறு யார் உதவுவார்கள். தமிழ்நாட்டிலிருந்து 18 மைல் தொலைவில் உள்ள ஈழத்தமிழர்கள் எந்த ஆதரவும் இல்லாத நிலையில் பேரவலத்தை சந்தித்து வருகின்றனர்.  3.5 லட்சம் மக்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளது  உலகில் வேறு எங்கும் நடக்காத மனிதப் பேரவலமாகும், அங்குள்ள முகாம்களில் 3.5லட்சம் மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அத்தை பேருக்கும் சேர்த்து  500 கழிப்பறைகள் தான் உள்ளது.

அதுவும் சுகாதாரமற்றவை, இதனால் அங்கு மலேரியா,டைபாய்டு, சிக்குன்-குன்யா உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்கி நாள்தோறும் பலர் இறந்து வருகின்றனர். சிகிக்சை அளிக்க போதிய மருத்துவர்களையும் நியமிக்க வில்லை. இலங்கை அரசு செய்துவரும் இந்த போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் தண்டனை அளிக்க வேண்டும். தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரப் புறக்கணிப்பு செய்தன.

அதன் விளைவாக அந்த அரசின் நிறவெறி முடிவுக்கு வந்தது. இலங்கையிலும் ராஜபக்செவின் அரசுக்கு எதிராக மாபெரும் பொருளாதார புறக்கணிப்பு போரை தமிழர்களும், உலகமும் மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் பொருள்களை வாங்காமல் புறக்கணித்தும், இலங்கைக்கு சுற்றலா செலாமலும் இருக்க வேண்டும், மற்றவர்களையும் அதற்கு நிர்பந்திக்க வேண்டும்.

அப்போது இலங்கையின் வெறித்தனம் அடங்கும்.”என்றார். இந்த கருத்தரங்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இலங்கைதமிழர் பாதுகாப்பு இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரும் பேசினர்.  பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளமானோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.