இந்திய விமானி நீர்கொழும்பில் கொலை உடல் சடலமாக மீட்ப்பு

india_flagஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்தியப் பிரஜையான விமானி ராமன் குமார் ரோய் நீர்கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாடிகளைக் கொண்ட அவரது வீட்டில் அவரது உடல் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
சடலம் மீட்கப்பட்ட வீட்டில் இரத்தம் தோய்ந்த கத்தியொன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டின் சில இடங்களில் இரத்தம் சிந்தப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். விமானியின் சடலம் வீக்கமடைந்திருந்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். கொல்லப்பட்டுள்ள விமானி, கடந்த 24ம் திகதி முதல் விடுமுறையில் சென்றிருந்தார். விமானியின் மனைவி கனடாவில் வசித்துவருவதுடன், இவரும் கனடாவிற்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்ததாகவும் விசாரணைககளிலிருந்து தெரியவந்துள்ளது.
 
விமானியின் வீட்டில் ஊழியர்கள் எவரும் தங்கியிருந்தனரா என்பதை அறிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த இந்திய விமானி நீர்கொழும்பு மயான வீதியில் வீடொன்றில் வசித்துவந்துள்ளார். இந்த வீட்டிற்கு அருகிலுள்ள பெண் ஒருவர் விமானியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக நீர்கொழும்பு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து அங்குசென்ற காவல்துறையினர் குறித்த இந்திய விமானியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.