உங்கள் வாக்குறுதிகளை நாங்கள் உன்னிப்பாக கவனிப்போம் – பான் கீ மூன்

2009_05_11_BanKi-Moonஅகதிகள் குறித்த இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
 
நியூயோர்க்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகளை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மீள் குடியேற்ற முடியும் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் தொடர்ச்சியாக அவதானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அகதிகள் மீள் குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து தனிப்பட்ட ரீதியிலும், சிரேஸ்ட அதிகாரிகளின் ஊடாகவும் கண்காணிப்பு நடத்தத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
சுதந்திர இடம் நகர்வு, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் மனித உரிமை போன்ற விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அண்மையில் இலங்கை பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவை சந்தித்த போது முக்கிய மூன்று விடயங்கள் குறித்து வலியுறுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனவரி மாதத்திற்குள் அகதிகள் மீள் குடியேற்றம், சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு தண்டனை வழங்குதல் ஆகியற்றையே தாம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.