“இலங்கையில் போர் இடைநிறுத்தப்பட வேண்டும்”: ஐ.நா. செயலாளர் நாயகம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன்

“பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு இலங்கையில் நடைபெற்று வரும் போர் இடைநிறுத்தப்பட வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பான் கீ மூன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போர் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும்.

வன்னிப் பகுதியில் மோதல்களில் சிக்கி பெருமளவான பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் கொண்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக அங்கு நடைபெற்று வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்றார் அவர்.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தனது கருத்தில் போர் நிறுத்தம் என்ற சொற்பதத்தினை பயன்படுத்தாதது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.