யுத்தக் குற்றங்களுக்காக சந்திரிகாவைக் கைது செய்ய மனித உரிமை அமைப்புத் தீவிரம்

chandrikaசர்வதேச யுத்தக் குற்றங்களின் பெயரில் வெளிநாடு ஒன்றில் வைத்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைக் கைதுசெய்விப்பதற்கான ஆயத்தங்களில் சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்பது தனக்குக் கிடைத்துள்ள அறிக்கைகள் மூலம் தெரியவருவதாக “லங்கா  ஈ  நியூஸ்” இணையத்தளம் தெரிவித்திருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைக் கைது செய்வதற்காக சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனம், அவரின் ஆட்சிக்காலத்தில் இடம் பெற்றவை எனக் கூறப்படும் 231 யுத்தக் குற்றச்சாட்டுகளைக் கொண்ட பத்திரம்ஒன்றைத் தயாரித்துள்ளது என்றும்  இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை வேறு ஒரு நாட்டில் வைத்துக் கைது செய்யத் தீவிர நடவடிக்கைகளை அந்த ஸ்தாபனம் எடுத்து வருகின்றது என்றும்  அந்த இணையத்தளம் செய்தி தெரிவிக்கின்றது.

“ஒரு நாட்டின் தற்போதைய அரசுத் தலைவருக்கு அல்லது முன்னாள் தலைவருக்கு எதிராக சர்வதேச சட்டத்தின் கீழ் யுத்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட முடியும். ஆனால் அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கு எதிராக அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. அத்தகையேருக்கு ஐ.நா.பாதுகாப்புக் கவுன்ஸிலின் தீர்மானத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கலாம்.”  என்று சர்வதேச சட்ட நிபுணராண அஸங்க வெலிகல குறிப்பிட்டார் என்று அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.