கிழக்கு மாகாணங்களில் உள்ள முகாம்கள் தொடர்பில் அரசாங்கத்தால் திட்டமிட்ட பொய் பரப்பப் படுகின்றது

jvp-t-200கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அகதிமுகாம்களும் மூடப்பட்டுள்ளது  என்று ஊடகமொன்றில் வெளியாகிய செய்தி உண்மையற்றது என ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அந்தப் பத்திரிகை தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

இந்த இடம்பெயர்ந்த மக்கள் கிழக்கு மாகாணத்தில் தனியார் காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு, 50 முதல் 100 குடும்பங்களாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களை மீண்டும் முகாமில் அடைக்கும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
 
இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளைத் தேடி அறியும் தேசிய மத்திய நிலையத்தின் ஏற்பட்;;டில்  கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக 5 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஜே.வீ.பீயின் அமைப்பு இந்த இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களின் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது.
 
இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளை தேடி அறியும் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர், முகாமில் உள்ளவர்கள்,  வெளியில் இருக்கும் அவர்களின்  உறவினர்கள் என ஏராளமான மக்கள் கடிதம் மூலமும், தொலைபேசி மூலம் இந்த அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனடிப்படையில் 723 முறைப்பாடுகள் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் குறித்து கிடைத்துள்ளன.
 
முகாம்களில் உணவு பிரச்சினை பிரதானமாக இருப்பதுடன், 2 ஆயிரம் ரூபாவுக்கு கூட பால் மாவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது. இந்த மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவுகளை சமைப்பதற்கு விறகு தேவைப்படுகிறது. இவ்வாறு தமக்கு வழங்கப்பட்ட உலர் உணவை சமைப்பதற்காக விறகு தேடி காட்டுக்கு செல்ல வேண்டியேற்பட்டுள்ளது. இவ்வாறு காட்டுக்கு சென்றவர்களின் சம்பவம் தொடர் பிரச்சினையாக மாறி துப்பாக்கிச் சூடு வரைச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இடம்பெயர்ந்துள்ள முகாமில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக அரசாங்கம் கூறிய போதிலும் அந்த மக்கள் மாற்று ஆடைகளைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாத அவலநிலையில் உள்ளனர்.  இதுவே உண்மையான நிலைமை.
 
எதிர்வரும் சில வாரங்களில் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளது. இதற்கு ஏதுவாக முன்னோடி நடவடிக்கைகளாக எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 70 ஆயிரம் மக்கள் வசிக்கும் முகாமில் 200 கழிவறைகளே இருக்கின்றன. நாளொன்றுக்கு 15 லீற்றர் குடிநீர் மாத்திரமே வழங்கப்படுகிறது. இதனையே, குளிப்பதற்கும், குடிப்பதற்கும், கழிவறைக்கும் பயன்படுத்த வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.